ஜம்மு-காஷ்மீர்: நீட் தேர்வில் வெற்றி பெற்ற முதல் பழங்குடி மாணவர்

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள முல்நார் ஹர்வானைச் சேர்ந்த பழங்குடியின மாணவர் ஒருவர் தேசிய தகுதி நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று தனது குடும்பத்தையும் சமூகத்தையும் பெருமைப்படுத்தியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர்: நீட் தேர்வில் வெற்றி பெற்ற முதல் பழங்குடி மாணவர்

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள முல்நார் ஹர்வானைச் சேர்ந்த பழங்குடியின மாணவர் துபைல் அஹமத் நீட்(NEET) தேர்வில் வெற்றி பெற்று தனது குடும்பத்தையும் சமூகத்தையும் பெருமைப்படுத்தியுள்ளார். 

ஸ்ரீநகரில் மிஷன் பள்ளியில் 8-ஆம் வகுப்பு வரை கல்வி கற்றார். மேலும், ஷாலிமாரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு முடித்த இவர், மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளார். 

அஹமத் செய்தியாளர்களிடம் பேசுகையில், 

அடிப்படை வசதிகள் இல்லாமல், தனது வாழ்வில் தான் சந்தித்த போராட்டங்கள் மற்றும் கஷ்டங்களை அவர் பகிர்ந்துகொண்டார். இன்டர்நெட் வசதி பெறுவதற்கும், பள்ளிக்குச் செல்வதற்கும் பல கிலோமீட்டர்கள் நடக்கவேண்டி இருந்தது தான் அனுபவித்த சிரமங்களில் ஒன்று. 

பொருளாதார நெருக்கடி என் குடும்பத்தில் அதிகமாக இருந்தது. நான் எதிர்கொண்ட கஷ்டங்கள்தான் தனக்காகவும், பழங்குடி சமூகத்திற்காகவும் ஏதாவது செய்யத் தூண்டியதாக அவர் தெரிவித்தார்.

பழங்குடியினரான நாங்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல், பல பிரச்னைகளை தினமும் எதிர்கொள்கிறோம். எனவே இந்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பது என் மனதில் எப்போதும் உள்ளது. 

மேலும், நீட் தேர்வில் வெற்றிபெற என் தாயும், தம்பியும் என்னை ஊக்குவித்தனர். இது எங்களுக்கும் எங்கள் சமூகத்திற்கும் பெருமையான தருணம் என்று அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com