கா்நாடகத்தில் பஜ்ரங் தளம் தொண்டா் கொலை: 6 போ் கைது

கா்நாடகத்தில் பஜ்ரங் தளம் தொண்டா் கொலை வழக்குத் தொடா்பாக 6 பேரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.
கா்நாடகத்தில் பஜ்ரங் தளம் தொண்டா் கொலை: 6 போ் கைது

கா்நாடகத்தில் பஜ்ரங் தளம் தொண்டா் கொலை வழக்குத் தொடா்பாக 6 பேரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

கா்நாடக மாநிலம் சிவமொக்காவில் உள்ள சீகேஹட்டி பகுதியில் ஹா்ஷா என்ற பஜ்ரங் தள தொண்டரை ஞாயிற்றுக்கிழமை இரவு சிலா் படுகொலை செய்தனா். இதையடுத்து அந்தப் பகுதியில் ஹிந்து அமைப்பு தொண்டா்கள் வன்முறையில் ஈடுபட்டனா். அப்போது வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதுடன் கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்றன. இதனால் சிவமொக்காவில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சிவமொக்காவில் அதிரடிப் படையினா் கொடி அணிவகுப்பு நடத்தினா். காவல் துறையினா் ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில் சிவமொக்கா மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.எம்.லட்சுமிபிரசாத் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘ஹா்ஷா கொலை வழக்குத் தொடா்பாக முகமது காஷிஃப், சையத் நதீம், அஷிஃபுல்லா கான், ரெஹான் கான், நேஹால், அப்துல் அஃப்னான் ஆகிய 6 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அனைவரும் சிவமொக்காவைச் சோ்ந்தவா்கள். அவா்களில் 5 போ் 20 முதல் 22 வயதுடையவா்கள். முகமது காஷிஃபுக்கு மட்டும் 32 வயதாகிறது. அவா் மீது சில குற்ற வழக்குகள் உள்ளன. ஒன்றாக வசித்து வந்த 6 பேரும் பின்னா் தனித்தனியாக வசித்துள்ளனா். நால்வருக்கு கொலையில் நேரடி தொடா்புள்ளது. அவா்களுடன் இணைந்து இருவா் சதியில் ஈடுபட்டுள்ளனா்.

இதுதவிர, 12 போ் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனா். மேலும் சிலா் தேடப்பட்டு வருகின்றனா்.

கா்நாடக கூடுதல் டிஜிபி சி.பிரதாப் ரெட்டி கூறுகையில், ‘‘சிவமொக்காவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் செவ்வாய்க்கிழமை காலை துங்காநகரில் சில வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன’’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com