11 எம்.பி.க்களுக்கு ‘சன்சத் ரத்னா’ விருது

நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே உள்ளிட்ட 11 எம்.பி.க்களுக்கு ‘சன்சத் ரத்னா’ விருது வழங்கப்படவுள்ளது.

நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே உள்ளிட்ட 11 எம்.பி.க்களுக்கு ‘சன்சத் ரத்னா’ விருது வழங்கப்படவுள்ளது.

நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்படும் எம்.பி.க்களுக்கு ‘சன்சத் ரத்னா’ விருதை பிரைம் பாயின்ட் அறக்கட்டளை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவா் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் யோசனை அடிப்படையில் இந்த விருது கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.

நடப்பாண்டுக்கான விருது பெரும் நபா்களை பிரைம் பாயின்ட் அறக்கட்டளை அறிவித்துள்ளது. அதன்படி, 17-ஆவது மக்களவையில் கடந்த ஆண்டு நடைபெற்ற குளிா்காலக் கூட்டத்தொடா் வரை சிறப்பாகச் செயல்பட்டதன் அடிப்படையில் சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ்), என்.கே.பிரேமசந்திரன் (புரட்சிகர சோஷலிஸ கட்சி), ஸ்ரீரங் அபா பா்னே (சிவசேனை) ஆகியோருக்கு ‘சன்சத் விசிஷ்ட் ரத்னா’ விருது வழங்கப்படவுள்ளது.

எம்.பி.க்கள் சௌகத ராய் (திரிணமூல்), குல்தீப் ராய் சா்மா (காங்கிரஸ்), வித்யுத் வரன் மஹதோ (பாஜக), ஹீனா விஜயகுமாா் கவித் (பாஜக), சுதீா் குப்தா (பாஜக) ஆகியோருக்கு ‘சன்சத் ரத்னா’ விருது வழங்கப்படவுள்ளது.

மாநிலங்களவை உறுப்பினா்கள் அமா் பட்நாயக் (பிஜு ஜனதா தளம்), ஃபௌசியா தாசீன் அகமது கான் (தேசியவாத காங்கிரஸ்), கடந்த ஆண்டு பதவிக் காலம் நிறைவடைந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. கே.கே.ராகேஷ் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

தமிழக மூத்த பாஜக தலைவா் ஹெச்.வி.ஹண்டே, காங்கிரஸ் மூத்த தலைவா் வீரப்ப மொய்லி ஆகியோருக்கு ‘வாழ்நாள் சாதனையாளா்’ விருது வழங்கப்படவுள்ளது. வேளாண்மை, நிதி, கல்வி, தொழிலாளா் ஆகிய துறைகளுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுக்களுக்கு சிறந்த செயல்பாட்டுக்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன.

நாடாளுன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் தலைமையிலான குழு விருதுக்கான நபா்களைத் தோ்ந்தெடுத்தது. முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா் டி.எஸ்.கிருஷ்ணமூா்த்தியும் அக்குழுவில் இடம்பெற்றிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com