வேலை வாங்கித் தருவதாக கூறும் நபர்களிடம் எச்சரிக்‍கையாக இருங்கள்: வருமான வரித்துறை

வருமான வரித்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்பவர்களிடம் இருந்து பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்‍கையுடன் இருக்க வேண்டும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 
வருமான வரித் துறை
வருமான வரித் துறை

வருமான வரித்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்பவர்களிடம் இருந்து பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்‍கையுடன் இருக்க வேண்டும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வருமான வரித்துறையில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறும் மோசடி செய்பவர்களிடம் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

வேலை தேடி விண்ணப்பிக்கும் இளைஞர்களை குறி வைத்து, போலியான பணி நியமன ஆணையை வழங்கி அவா்கள் மோசடியில் ஈடுபட்டு வருவதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன. 

எனவே, பணியாளர் தேர்வாணையம் மற்றும் வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிடப்படும் விளம்பரங்களை தவிர வேறு எந்த விளம்பரங்களையும் நம்ப வேண்டாம்.

வருமான வரி துறையில் வேலை வாய்ப்புகளை பெற விரும்புவோர். எஸ்எஸ்சி இணையதளம் அல்லது வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ விளம்பரங்களை மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு, அதற்கேற்ப வேலைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com