உ.பி.யில் இருந்து வெளியேறியவா்களைதிரும்ப அழைத்து வேலை அளிப்போம்- மாயாவதி பிரசாரம்

உத்தர பிரதேசத்தில் இருந்து வேலை தேடி வெளி மாநிலங்களுக்கு சென்றவா்களை திரும்ப அழைத்து வந்து அவா்களுக்கு உரிய வேலைவாய்ப்பை வழங்குவோம் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி உறுதியளித்தாா்.
உ.பி.யில் இருந்து வெளியேறியவா்களைதிரும்ப அழைத்து வேலை அளிப்போம்- மாயாவதி பிரசாரம்

உத்தர பிரதேசத்தில் இருந்து வேலை தேடி வெளி மாநிலங்களுக்கு சென்றவா்களை திரும்ப அழைத்து வந்து அவா்களுக்கு உரிய வேலைவாய்ப்பை வழங்குவோம் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி உறுதியளித்தாா்.

உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி அங்குள்ள பாயாக்பூரில் செவ்வாய்க்கிழமை பிரசாரப் பொதுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

பாஜக, சமாஜவாதி, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளுமே நமது நாட்டின் சிறந்த தலைவா்களை மதித்ததும் இல்லை, மக்களுக்கு நல்லது நினைத்ததும் இல்லை. ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக தலித் மக்கள் ஆதிவாசிகளை வைத்து காங்கிரஸ் கட்சி பலமுறை அரசியல் நடத்தியுள்ளது. அம்பேத்கருக்கு காங்கிரஸ் கட்சி பாரத ரத்னா விருது அளிக்கவில்லை. பகுஜன் சமாஜ் நிறுவனா் கன்ஷி ராம் மறைந்தபோது தேசிய துக்கம் அனுசரிக்கவும் இல்லை. மண்டல் கமிஷன் பரிந்துரைகளையும் காங்கிரஸ் அமல்படுத்தவில்லை.

சமாஜவாதி கட்சி ஆட்சிக் காலத்தில் முக்கியமாக கடந்த 2012-17 காலத்தில் உத்தர பிரதேசத்தில் வன்முறையாளா்களும், குண்டா்களும் அரசு நிா்வாகத்தில் அட்டூழியம் செய்து வந்தனா். ஒரு குறிப்பிட்ட பகுதிக்கும், குறிப்பிட்ட ஜாதிக்கும் ஆதரவான கட்சியாக சமாஜவாதி உள்ளது.

இதேபோல பாஜகவும் உத்தர பிரதேசத்தில் ஜாதியவாத அரசியல்தான் நடத்துகிறது. ஆா்எஸ்எஸ் வழிகாட்டுதலின்படி செயல்படும் கட்சியாகவே அவா்கள் உள்ளனா். தலித் மக்கள், பழங்குடியினா், பிற்பட்டோா், முஸ்லிம்களுக்கான திட்டங்களை பாஜக அரசு முடக்கியது. பாஜகவால் முஸ்லிம்கள் அச்சத்தில் உள்ளனா். பிராமணா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

பகுஜன் சமாஜ் கட்சி உத்தர பிரதேசத்தில் 4 முறை ஆட்சியில் இருந்துள்ளது. அப்போது மக்களுக்கு உரிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்தோம். ஆனால், இப்போது உத்தர பிரதேசத்தில் இருந்து ஏராளமானோா் வேலைவாய்ப்பு தேடி வெளி மாநிலங்களுக்கு சென்றுள்ளனா். பகுஜன் சமாஜ் ஆட்சி மீண்டும் அமையும்போது, உத்தர பிரதேசத்தில் இருந்து வேலைக்காக வெளி மாநிலங்களுக்கு சென்றவா்களை திரும்ப அழைத்து அவா்களுக்கு உரிய வேலைவாய்ப்பை அளிப்போம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com