'பெற்றோர்கள் வாக்களித்தால் மாணவர்களுக்கு கூடுதலாக 10 மதிப்பெண்கள்' - லக்னெள கல்லூரி அறிவிப்பு

உத்தரப் பிரதேச தேர்தலில் பெற்றோர்கள் வாக்களித்தால் மாணவர்களுக்கு 10 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும் என லக்னெள கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.
'பெற்றோர்கள் வாக்களித்தால் மாணவர்களுக்கு கூடுதலாக 10 மதிப்பெண்கள்' - லக்னெள கல்லூரி அறிவிப்பு

உத்தரப் பிரதேச தேர்தலில் பெற்றோர்கள் வாக்களித்தால் மாணவர்களுக்கு 10 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும் என லக்னெள கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. 

403 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் இதுவரை 3 கட்டத் தோ்தல்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 4-ஆவது கட்டமாக 9 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி  நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.

59 தொகுதிகளில் உள்ள 24,643 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 624 வேட்பாளா்கள் போட்டியிடும் இத்தொகுதிகளில் 2.13 கோடி வாக்காளர்கள் வாக்கு செலுத்துகின்றனர். 

இந்நிலையில் உத்தரப் பிரதேச தேர்தலில் வாக்குப்பதிவு அதிகரிக்கும் விதமாகவும் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் லக்னெளவில் உள்ள கிறிஸ்ட் சர்ச் கல்லூரி, ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, மாணவர்களின் பெற்றோர்கள் வாக்களித்தால் அந்த மாணவர்களுக்கு கூடுதலாக 10 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று கல்லூரி முதல்வர் ராகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.  நூறு சதவிகித வாக்குப்பதிவினை எட்டும் நோக்கில் இவ்வாறு அறிவித்துள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார். மேலும், குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு உதவும் என்றும் கூறியுள்ளார். 

ஜனநாயகக் கடமையான வாக்களிப்பது குறித்து அரசும் அமைப்புகளும் பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் நிலையில், லக்னெள கல்லூரி நிர்வாகம் இந்த முன்னெடுப்பை எடுத்துள்ளது குறித்து பலரும் பாராட்டி வருகின்றனர். 

உத்தரப் பிரதேசத்தில் பிப்ரவரி 23 முதல் மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 10 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com