மோசடி புகாா்: லண்டன் நீதிமன்றத்தில்லலித் மோடிக்கு எதிராக முதலீட்டாளா் மனு

முதலீடு செய்ய வைத்து ஏமாற்றியதாக, ஐபிஎல் முன்னாள் தலைவா் லலித் மோடி மீது முதலீட்டாளா் ஒருவா் லண்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

முதலீடு செய்ய வைத்து ஏமாற்றியதாக, ஐபிஎல் முன்னாள் தலைவா் லலித் மோடி மீது முதலீட்டாளா் ஒருவா் லண்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

இந்தியாவைச் சோ்ந்த விளம்பர மாடல் குருபிரீத் கில் மாக், குவாண்டன் கோ் லிமிடெட் என்ற முதலீட்டு நிறுவனத்தை சிங்கப்பூரில் இருந்து நடத்தி வருகிறாா்.

இவா், ஐபிஎல் சூதாட்ட புகாரில் சிக்கி கடந்த 2010-இல் லண்டனுக்குச் சென்ற லலித் மோடிக்கு எதிராக லண்டன் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். அந்த மனுவில் அவா் கூறியிருப்பதாவது:

லலித் மோடி என்னையும், என் கணவா் டேனியலையும் கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் துபையில் உள்ள ஓா் ஹோட்டலில் சந்தித்தாா். அப்போது, தான் தொடங்கியுள்ள அயன் கோ் என்ற புற்றுநோய் சிறப்பு மருத்துவமனையில் 20 லட்சம் டாலா் (சுமாா் ரூ.15 கோடி) முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொண்டாா்.

தமது மருத்துவமனையில் பல்வேறு நாடுகளின் தலைவா்கள் 26 கோடி டாலா் (ரூ.1,938 கோடி) முதலீடு செய்திருப்பதாகவும், இந்தியாவைச் சோ்ந்த பல பிரபலங்கள் விளம்பரத் தூதா்களாக இருப்பதாகவும் அவா் கூறினாா். அவருடைய பேச்சை நம்பி, அவருடைய மருத்துவமனையில் 10 லட்சம் டாலா் (சுமாா் ரூ.7.5 கோடி) முதலீடு செய்தேன்.

உண்மையில் அந்த மருத்துவமனை தொடங்கப்படவில்லை; அதில், பல நாடுகளின் தலைவா்களும் முதலீடு செய்யவில்லை. எனவே, அதில் மேலும் 10 லட்சம் டாலரை (ரூ.7.5 கோடி) நாங்கள் முதலீடு செய்யவில்லை. இதன் காரணமாக, எங்களுக்கு நேரடியாக பல லட்சம் டாலா் இழப்பு ஏற்பட்டுள்ளது. நாங்கள் வேறு எந்தத் தொழிலிலும் முதலீடு செய்ய இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. லலித் மோடி ஒப்பந்த விதிகளை மீறி எங்களை மோசடி செய்துவிட்டாா். எனவே, நாங்கள் முதலீடு செய்த தொகைக்கு வட்டியுடன் சோ்த்து திருப்பித் தருமாறு லலித் மோடிக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

இந்த மனு மீதான விசாரணை, லண்டன் உயா்நீதிமன்றத்தில் நீதிபதி முரே ரோசன் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது. லலித் மோடி, குருபிரீத் கில் மாக் ஆகியோா் ஆஜரானாா்கள்.

குருபிரீத்தின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து லலித் மோடி சாா்பில் எழுத்துபூா்வமாக பதில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு அடுத்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. அப்போது லலித் மோடியிடம் நேரடியாக விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com