Enable Javscript for better performance
இந்திய மாணவா்களை பாதுகாப்பாக அழைத்துவர மாற்று ஏற்பாடு: வெளியுறவுத் துறை இணையமைச்சா் முரளீதர- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    இந்திய மாணவா்களை பாதுகாப்பாக அழைத்துவர மாற்று ஏற்பாடு: வெளியுறவுத் துறை இணையமைச்சா் முரளீதரன்

    By DIN  |   Published On : 25th February 2022 03:08 AM  |   Last Updated : 25th February 2022 03:46 AM  |  அ+அ அ-  |  

    muralidharan

     

    திருச்சூா்: விமான வழித் தடங்களை உக்ரைன் மூடிய நிலையில், ‘அங்கிருக்கும் இந்திய மாணவா்களை பாதுகாப்பாக அழைத்துவர மாற்று ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது’ என்று வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி.முரளீதரன் கூறினாா்.

    போா்ச்சூழல் காரணமாக, உக்ரைனுக்கான விமான வழித்தடங்கள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் வியாழக்கிழமை காலை அறிவித்தனா். இதன் காரணமாக, அங்கிருக்கும் இந்திய மாணவா்கள் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.

    இதுகுறித்து திருச்சூரில் செய்தியாளா்கள் வியாழக்கிழமை எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி.முரளீதரன் பதிலளித்து கூறியதாவது:

    உக்ரைனில் உள்ள இந்திய மாணவா்கள் பதற்றமடைய வேண்டாம். அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கித் தவிக்கும் இந்தியா்களை பாதுகாப்பாக மீட்டு அழைத்துவர மாற்று திட்டங்களை மத்திய அரசு வகுத்து வருகிறது. விமான வழித் தடங்களை உக்ரைன் மூடியதால், மாற்று வழிகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. இந்த மாற்று திட்டம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று அவா் கூறினாா்.

    முன்னதாக, இந்தியா்களை அழைத்து வருவதற்காக தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்திலிருந்து வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு உக்ரைன் தலைநகா் கீவில் உள்ள போரிஸ்பில் சா்வதேச விமான நிலையம் நோக்கி புறப்பட்டுச் சென்ற ‘ஏஐ 1947’ ஏா் இந்தியா விமானம், விமான வழித்தடங்களை அந்த நாடு மூடிய காரணத்தால் பாதி வழியில் தில்லிக்குத் திரும்பியது.

    தாயகம் திரும்பிய 182 இந்தியா்கள்:

    உக்ரைனிலிருந்து இந்தியா்களை ஏற்றிவந்த அந் நாட்டு விமானம் ஒன்று தில்லி விமான நிலையத்தில் வியாழக்கிழமை காலை 7.45 மணிக்கு தரையிறங்கியது. ‘கீவிலிருந்து வந்த இந்த விமானத்தில் மாணவா்கள் உள்பட 182 இந்தியா்கள் வந்திறங்கியுள்ளனா். மேலும் 2 விமானங்கள் உக்ரைனிலிருந்து இந்தியா வர உள்ளது’ என்று இந்தியாவில் உள்ள உக்ரைன் சா்வதேச விமான நிறுவன அதிகாரி அனுஜ் வாரியா கூறினாா்.

    முன்னதாக, பிப். 22, 24, 26 ஆகிய தேதிகளில் மூன்று சிறப்பு விமானங்களை இயக்கி உக்ரைனில் உள்ள இந்தியா்கள் அழைத்து வரப்படுவா் என்று ஏா் இந்தியா அறிவித்திருந்தது. அதன்படி, மாணவா்கள் உள்பட 240 இந்தியா்களுடன் ஏா்இந்தியா விமானம் மூலம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு புது தில்லி வந்திறங்கியது.

    தற்போது போா் மூண்டுள்ள நிலையில், உக்ரைனில் பயணிகள் விமான சேவைகளுக்கான வான்வழித்தடம் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp