பஜ்ரங் தளத் தொண்டா் கொலை: சிவமொக்காவில் ஒருவார விடுமுறைக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பு

சிவமொக்காவில் ஒருவார விடுமுறைக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. 
பஜ்ரங் தளத் தொண்டா் கொலை: சிவமொக்காவில் ஒருவார விடுமுறைக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பு

சிவமொக்காவில் ஒருவார விடுமுறைக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. 

கா்நாடக மாநிலம், சிவமொக்காவில் உள்ள சீகேஹட்டி பகுதியில் தையலராகப் பணியாற்றி வந்தவா் ஹா்ஷா(23). இவா், பஜ்ரங் தள அமைப்பில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தாா். இந்நிலையில், பாரதி காலனி, ரவிவா்மா லேனில் கடந்த 20ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு மா்ம நபா்கள் சிலரால் ஹா்ஷா குத்துவாளால் குத்திப் படுகொலை செய்யப்பட்டாா். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஹா்ஷாவை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதனால் ஆத்திரமடைந்த பஜ்ரங் தளம் உள்ளிட்ட ஹிந்து மத அமைப்பினா் வன்முறையில் ஈடுபடத் தொடங்கினா். சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்குத் தீ வைத்தனா். கட்டடங்கள், கடைகள், வாகனங்களை கல்வீசித் தாக்கினா். இதனால் சிவமொக்காவில் பதற்றம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, சிவமொக்கா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

இந்தச் சம்பவம் கா்நாடகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சிவமொக்காவில் ஒருவார விடுமுறைக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் இன்று மீண்டும் வழக்கம்போல் திறக்கப்பட்டன. இருப்பினும் மார்ச் 4ஆம் தேதி வரை மக்கள் பொதுவெளியில் மாலை 7 மணி முதல் காலை 7 மணி வரை நடமாடத் தடை விதித்து நேற்று சிவமொக்கா மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com