
நாட்டில் 15-18 வயதுடையவர்கள் தடுப்பூசி செலுத்துவதற்கான முன்பதிவு இன்று (சனிக்கிழமை) தொடங்கியது.
நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுள்ள சிறார்களுக்கு ஜனவரி 3-ம் தேதி முதல் கரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கடந்த டிசம்பர் 25-ம் தேதி அறிவித்தார். இதற்கான முன்பதிவு ஜனவரி 1-ம் தேதி முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கோவின் செயலி மற்றும் இணையத்தில் சிறார்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. ஆதார் மற்றும் இதர தேசிய அடையாள அட்டைகள் மட்டுமில்லாமல், மாணவர்களின் பள்ளி அடையாள அட்டையைப் பயன்படுத்தியும் தடுப்பூசி செலுத்துவதற்கு முன்பதிவு செய்துகொள்ளலாம்.
முன்பதிவு செய்ய: https://www.cowin.gov.in/