கரோனா அதிகரிப்பு: மேற்கு வங்கத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடல்

கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதன் எதிரொலியாக மேற்கு வங்கத்தில் பள்ளி, கல்லூரிகளை மூட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதன் எதிரொலியாக மேற்கு வங்கத்தில் பள்ளி, கல்லூரிகளை மூட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

திரையரங்குகள், சலூன் கடைகள், அழகு நிலையங்களை செயல்படவும் மேற்கு வங்க அரசு தடை விதித்துள்ளது.  

நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. கரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், மீண்டும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அதனைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி மேற்கு வங்கத்தில் கரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால், பள்ளி, கல்லூரிகளை மூடுவதற்கு அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

மேலும், திரையரங்குகள், அழகு நிலையங்கள், சலூன் கடைகள் மறுதேதி குறிப்பிடும் வரை திறக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நாளை (ஜன.2) முதல் அமலுக்கு வரவுள்ளது.

அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவிகித ஊழியர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால், லண்டனிலிருந்து வரும் நேரடி விமானங்கள் மேற்கு வங்கத்தில் தரையிறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேற்கு வங்கத்தில் நேற்று (ஜன.1) ஒரு நாளில் மட்டும்  4,512 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மேற்கு வங்கத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 13,300-ஆக அதிகரித்துள்ளது. 3-வது அதிகமாக கரோனா பாதிப்பு பதிவாகும் மாநிலமாக மேற்கு வங்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com