சிறார்களுக்கு கோவேக்ஸின் மட்டுமே போட வேண்டும்: மத்திய சுகாதாரத்துறை

நாடு முழுவதும் சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியுள்ள நிலையில், அவர்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி மட்டுமே செலுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
சிறார்களுக்கு கோவேக்ஸின் மட்டுமே போட வேண்டும்

நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுள்ள சிறார்களுக்கு ஜனவரி 3-ம் தேதி முதல் கரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கடந்த டிசம்பர் 25-ம் தேதி அறிவித்தார். இதற்கான முன்பதிவு ஜனவரி 1-ம் தேதி முதல் தொடங்கப்பட்டு கோவின் இணையதளத்தில் நடைபெற்று வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட செய்தியில்,

“சிறார்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 18 வயது மேற்பட்டவர்கள் அனைத்து தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.”

இந்தியாவில் கோவேக்ஸின், கோவிஷீல்ட், ஸ்புட்னிக் வி உள்ளிட்ட கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்பதிவு செய்ய: https://www.cowin.gov.in/

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com