சொகுசுக் கப்பலிலிருந்து கரோனா நோயாளிகள் மும்பை சிறப்பு மையத்துக்கு மாற்றம்

கோவாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட சொகுசுக் கப்பலில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 66-க்கும் மேற்பட்ட பயணிகளில், இதுவரை 41 பேர் மும்பையில் சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக
சொகுசுக் கப்பலிலிருந்து 41 கரோனா நோயாளிகள்சிறப்பு மையத்துக்கு மாற்றம்
சொகுசுக் கப்பலிலிருந்து 41 கரோனா நோயாளிகள்சிறப்பு மையத்துக்கு மாற்றம்

மும்பை: கோவாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட சொகுசுக் கப்பலில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 66-க்கும் மேற்பட்ட பயணிகளில், இதுவரை 41 பேர் மும்பையில் சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட 19 பயணிகள், இன்னமும் சொகுசுக் கப்பலிலேயே இருக்கிறார்கள். இதுவரை கப்பலிலிருந்த 1,827 பேருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களது முடிவுகள் இன்று மாலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் மும்பை மாநகராட்சிச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சொகுசுக் கப்பலிலிருந்து 41 கரோனா பாதித்தவர்களைத் தவிர வேறு எந்தப் பயணியும், வெளியே இறங்க மும்பை மாநகராட்சி அனுமதிக்கவில்லை.

பரிசோதனை முடிவுகள் வெளிவந்த பிறகே, கரோன இல்லாதவர்கள் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள். அவர்களும் அடுத்த 7 நாள்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தபப்டுவார்கள் என்றும் அவர் கூறினார்.

புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக மும்பையில் இருந்து கோவாவுக்குச் சென்ற காா்டீலியா எம்பிரஸ் சொகுசுக் கப்பலின் ஊழியா் ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கப்பலில் கரோனா பாதிக்கப்பட்ட 27 பயணிகள் கோவாவில் உள்ள தனிமைப்படுத்தல் மையத்தில் தங்க மறுப்புத் தெரிவித்துவிட்டனா். இதனால் சொகுசு கப்பல் மீண்டும் மும்பைக்கே திருப்பி அனுப்பப்பட்டது. தெற்கு மும்பையில் உள்ள பல்லாா்ட் கப்பல் முனையத்தில் இந்த சொகுசுக் கப்பல் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு வந்து சோ்ந்தது. 

அப்போது கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 66-ஐ தாண்டியது. கரோனா பாதித்தவா்களை தனிமைப்படுத்தல் முகாமுக்கு அதிகாரிகள் கொண்டு சென்றனா். மீதமுள்ளவா்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகள் புதன்கிழமை வரும் என்பதால் அதுவரை அவா்கள் அனைவரும் கப்பலிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனா் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com