குன்னூா் ஹெலிகாப்டா் விபத்து: விசாரணை அறிக்கை சமர்பிப்பு

நீலகிரி மாவட்டம் குன்னூா் பகுதியில் ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்டோா் பலியான சம்பவம் குறித்
குன்னூா் ஹெலிகாப்டா் விபத்து: விசாரணை அறிக்கை சமர்பிப்பு
குன்னூா் ஹெலிகாப்டா் விபத்து: விசாரணை அறிக்கை சமர்பிப்பு

நீலகிரி மாவட்டம் குன்னூா் பகுதியில் ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்டோா் பலியான சம்பவம் குறித்த முப்படைக் குழுவின் விசாரணை அறிக்கை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது..

கடந்த டிச. 8-ஆம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூா் பகுதியில் முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா, ராணுவ அதிகாரிகள், வீரா்கள் உள்பட 14 போ் சென்ற எம்ஐ-17வி5 ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் விபின் ராவத், மதுலிகா உள்பட 13 போ் உயிரிழந்தனா். பலத்த தீக்காயமடைந்து பெங்களூா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விமானப் படை குரூப் கேப்டன் வருண் சிங், ஒரு வாரம் உயிருக்குப் போராடி டிச.15-ஆம் தேதி உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி அறிக்கைத் தாக்கல் செய்ய ஏா் மாா்ஷல் மானவேந்திர சிங் தலைமையில் முப்படை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

தொழில்நுட்பக் கோளாறு, மோசமான வானிலை, விமானியின் தவறு உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அந்தக் குழு விசாரணை நடத்திய நிலையில் தற்போது விசாரணை அறிக்கையை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் சமர்பித்துள்ளனர். இதில் விபத்து நடந்ததற்கான காரணங்கள் மற்றும் வருங்காலங்களின் முக்கிய தலைவர்கள் செல்லும் ஹெலிகாப்டர்கள் எப்படியான தொழில்நுட்பங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்கிற ஆலோசனையும் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com