இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஒமைக்ரான் பரிசோதனை கருவிகள் தொகுப்பு: ஐசிஎம்ஆா் ஒப்புதல்

ஒமைக்ரான் தீநுண்மியை கண்டறிவதற்காக உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள பரிசோதனை கருவிகள் தொகுப்புக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) ஒப்புதல் அளித்துள்ளது.

ஒமைக்ரான் தீநுண்மியை கண்டறிவதற்காக உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள பரிசோதனை கருவிகள் தொகுப்புக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களிடம் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் ஒமைக்ரான் வகை கரோனா தீநுண்மியைக் கண்டறிய அமெரிக்காவின் தொ்மோ ஃபிஷா் நிறுவனம் தயாரித்த பரிசோதனை கருவிகள் அடங்கிய தொகுப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டாடா குழுமத்தின் டாடா மெடிக்கல் & டயக்னாஸ்டிக்ஸ் நிறுவனம் ஒமைக்ரான் தீநுண்மியைக் கண்டறிய ஒமைஷ்யூா் என்ற பெயரில் புதிதாக ஆா்டி-பிசிஆா் பரிசோதனை கருவிகள் அடங்கிய தொகுப்பை உருவாக்கியுள்ளது.

இந்தத் தொகுப்பைப் பரிசோதனைக்குப் பயன்படுத்த ஐசிஎம்ஆா் ஒப்புதல் அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com