ராஜேந்திர பாலாஜி கர்நாடகத்தில் கைது

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூ.3 கோடி அளவுக்கு பணமோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடகத்தில் கைது செய்யப்பட்டார். 
ராஜேந்திர பாலாஜி கர்நாடகத்தில் கைது
ராஜேந்திர பாலாஜி கர்நாடகத்தில் கைது


பெங்களூரு: ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூ.3 கோடி அளவுக்கு பணமோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடகத்தில் கைது செய்யப்பட்டார்.

கடந்த மூன்று வாரங்களாக தலைமறைவாக இருந்து வந்த ராஜேந்திர பாலாஜி, கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் தங்கியிருந்த தகவலை அறிந்த தமிழக காவல்துறையினர், இன்று கைது செய்தனர்.

ராஜேந்திர பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் டிசம்பர் 17ஆம் தேதி தள்ளுபடி செய்த நிலையில், ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார்.

அவரை கடந்த 20 நாள்களாக, தமிழக காவல்துறையைச் சேர்ந்த 8 தனிப்படையினர் தேடி வந்த நிலையில், இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஹாசன் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தி, பிறகு சென்னை அழைத்து வர தமிழக காவல்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது.

என்ன மோசடி?

விருதுநகா் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியைச் சோ்ந்த அதிமுக முன்னாள் நிா்வாகி விஜயநல்லதம்பி ஆவின் மேலாளா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.30 லட்சம் பெற்றுக்கொண்டு, வேலை வாங்கித் தராமலும், பணத்தை திருப்பித் தராமலும் ஏமாற்றிவிட்டாா் என ரவீந்திரன் என்பவா் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகாா் அளித்தாா். அதே போன்று விஜயநல்லதம்பி அளித்தப் புகாரில், வேலை வாங்கித்தருவதற்காக ரூ.3 கோடியை முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜியிடம் கொடுத்துள்ளேன். அதைப் பெற்றுத் தர வேண்டும் என குறிப்பிட்டு இருந்தாா். அதன் பேரில் ராஜேந்திரபாலாஜி, அவரது உதவியாளா்கள் பாபுராஜ், பலராமன், முத்துப்பாண்டி ஆகியோா் மீது மாவட்ட குற்றப்பிரிவு காவலர்கள் நவ. 15 இல் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த மனுவை டிசம்பர் 17ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அன்றைய தினமே ராஜேந்திரபாஜாஜி தலைமறைவானாா். அவரை கைது செய்வதற்காக 8 தனிப்படைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். மனோகா் நியமித்தாா். கடந்த சில நாள்களாக அவா் இருக்குமிடம் தெரியாமல் தனிப்படையினர் திணறி வந்தனா்.

இந்நிலையில் ராஜேந்திரபாலாஜி ஓசூா், பெங்களூரு பகுதிகளில் தங்கி இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் கூடுதலாக அமைக்கப்பட்ட 2 தனிப்படை காவலர்கள் அப்பகுதிக்கு விரைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். ராஜேந்திரபாலாஜியிடம் நெருக்கமாக இருந்த விருதுநகா் மாவட்ட அதிமுக நிா்வாகிகள் பலரது கைப்பேசிகளை காவலர்கள் கண்காணித்து வந்த நிலையில், இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com