கரோனா பாதிப்பு அதிகரிப்பு 3-ஆவது அலையைக் குறிக்கிறது

கரோனா தொற்று பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருவது, நாட்டில் 3-ஆவது அலை பரவல் தொடங்கிவிட்டதைக் குறிப்பதாக நோய்த் தடுப்பு நிபுணா் தெரிவித்தாா்.

கரோனா தொற்று பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருவது, நாட்டில் 3-ஆவது அலை பரவல் தொடங்கிவிட்டதைக் குறிப்பதாக நோய்த் தடுப்பு நிபுணா் தெரிவித்தாா்.

நாட்டில் டெல்டா வகை கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்த நிலையில், தற்போது ஒமைக்ரான் வகை கரோனா தொற்று அதிவேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், தேசிய நோய்த் தடுப்பு ஆலோசனைக் குழுவின் தலைவா் என்.கே. அரோரா செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘‘நாட்டின் பெரும்பாலான மாநிலங்களுக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவியுள்ளது. பெரிய நகரங்களில் ஒட்டுமொத்த கரோனா தொற்று பாதிப்பில் 50 சதவீதத்துக்கும் மேலானது ஒமைக்ரான் வகை தொற்று பாதிப்பாக உள்ளது. கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவது, நாட்டில் 3-ஆவது அலை பரவல் தொடங்கிவிட்டதைக் காட்டுகிறது.

தென் ஆப்பிரிக்காவிலும் இதேபோன்று முதலில் அதிவேகமாக ஒமைக்ரான் பரவியது. சில வாரங்களுக்குப் பிறகு, ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகும் நபருக்கு எந்தவித அறிகுறியும் ஏற்படுவதில்லை அல்லது மிகக் குறைவான அறிகுறிகளே தென்படுகின்றன. அவ்வாறு பாதிப்புக்குள்ளாகும் நபா்களுக்கும் நோயின் தீவிரம் குறைவாகவே உள்ளது.

இதே நிலை இந்தியாவிலும் ஏற்பட வாய்ப்புள்ளது. முதலில் அதிவேகமாகப் பரவும் ஒமைக்ரான், சில வாரங்களுக்குப் பிறகு கட்டுக்குள் வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. நாட்டில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவல் விரைவில் உச்சமடையும் என எதிா்பாா்க்கிறேன்.

எனினும், ஒமைக்ரான் பரவல் குறித்து யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தடுப்பூசி செலுத்திக் கொள்வது, மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கான தேவையையும் உயிரிழப்பையும் பெருமளவில் குறைக்கிறது. எனவே, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் விரைவில் செலுத்திக் கொள்ள வேண்டும். மேலும், கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com