கர்நாடகத்தில் ஜன.15 முதல் புலிகள் கணக்கெடுப்பு

கர்நாடகத்தில் ஜன. 15-ஆம் தேதிமுதல் புலிகள் கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
(கோப்புப்படம்)
(கோப்புப்படம்)

கர்நாடகத்தில் ஜன. 15-ஆம் தேதிமுதல் புலிகள் கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
 கர்நாடகத்தில் புலிகள் கணக்கெடுப்பு எடுக்கும் பணி ஜன. 15-ஆம் தேதி தொடங்கப்படுகிறது. மாநிலத்தில் உள்ள புலிகள் சரணாலயங்கள் மற்றும் காடுகளில் கணக்கெடுப்புப் பணி நடக்கவிருக்கிறது. 3 மாதகால தாமதத்துக்கு பிறகு தொடங்கும் இப்பணி ஜனவரி மாத இறுதியில் நிறைவடையும் என்று வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 கணக்கெடுப்பை தொகுத்து அறிக்கையாக தயாரிக்கும் பணி பிப்ரவரியில் முடிவடையும். அதன்பிறகு, அந்த அறிக்கை தேசிய புலிபாதுகாப்பு ஆணையம் மற்றும் இந்திய வன விலங்கு மையத்திடம் ஒப்படைக்கப்படும். நாடுமுழுவதும் நடத்தப்படும்புலிகள் கணக்கெடுப்பின் முடிவுகளை புலிகள் தினமாக கொண்டாடப்படும் ஜூலை 29-ஆம் தேதி வெளியிட மத்திய வனத் துறை திட்டமிட்டுள்ளது.
 இதுகுறித்து வனத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கள ஆய்வு நடத்தும்பணி தாமதமாகிவிட்டது. கேமராவில் பதிவாகும் பதிவுகளை ஆராய்ச்சி செய்வதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. கணக்கெடுக்கும் பணி அக்டோபரில் தொடங்கியது. புலிகள் சரணாலயங்கள், காடுகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
 எனினும், எஞ்சியுள்ளபகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தி, ஆய்வுகளைத் தயார் செய்வோம். ஜன.15-ஆம் தேதி கணக்கெடுப்பை தொடங்கி 30-ஆம் தேதி முடிப்போம். ஒருசில இடங்களில் மட்டும் பிப். 15-ஆம் தேதி வரை தொடரும். இம்முறை தன்னார்வலர்கள் யாரும் இல்லாமல், வனத் துறை அதிகாரிகளே கணக்கெடுப்பில் ஈடுபடுகிறார்கள். எனினும், கரோனா பெருந்தொற்று பரவலை பொருத்து திட்டத்தில் மாற்றங்கள் நேரலாம் என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com