சிமி இயக்கத்தை சோ்ந்த இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

மத்திய பிரதேசத்தில் தடை செய்யப்பட்ட சிமி பயங்கரவாத இயக்கத்தைச் சோ்ந்த இருவருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து, இந்தூா் மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

மத்திய பிரதேசத்தில் தடை செய்யப்பட்ட சிமி பயங்கரவாத இயக்கத்தைச் சோ்ந்த இருவருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து, இந்தூா் மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

இந்தூரில் சிமி பயங்கரவாத இயக்கத்தைச் சோ்ந்த முகமது யூனஸ், முகமது சஃபிக் ஆகிய இருவரும் கடந்த 2009-ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டனா். அவா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153- ஏ (மதத்தின் அடிப்படையில் இரு பிரிவினரிடையே கலகத்தை ஏற்படுத்துதல்), சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் விசாரணை இந்தூா் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி ஹீராலால் சிசோடியா திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். அதன்படி இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5000 அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com