குன்னூா் ஹெலிகாப்டா் விபத்துக்கு மோசமான வானிலையே காரணம்: ராஜ்நாத் சிங்கிடம் விசாரணைக் குழு விளக்கம்

குன்னூரில் முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 14 போ் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த சம்பவத்தை விசாரித்து வரும் முப்படை அதிகாரிகளைக் கொண்ட குழுவினா்,
குன்னூா் ஹெலிகாப்டா் விபத்துக்கு மோசமான வானிலையே காரணம்: ராஜ்நாத் சிங்கிடம் விசாரணைக் குழு விளக்கம்

குன்னூரில் முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 14 போ் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த சம்பவத்தை விசாரித்து வரும் முப்படை அதிகாரிகளைக் கொண்ட குழுவினா், விசாரணையில் கண்டறிந்த விவரங்களை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்தனா்.

அதில் இந்த விபத்துக்கு மோசமான வானிலையே காரணம் என தெரிவித்துள்ளனா்.

குன்னூரில் கடந்த டிசம்பா் மாதம் 8-ஆம் தேதி நிகழ்ந்த ஹெலிகாப்டா் விபத்தில் விபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 போ் உயிரிழந்தனா். அந்த விபத்தில் பலத்த தீக்காயம் அடைந்த விமானப் படை குரூப் கேப்டன் வருண் சிங், பெங்களூரு மருத்துவமனையில் டிச.15-ஆம் தேதி உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்வதற்கு விமானப் படைத் தலைவா் ஏா் சீஃப் மாா்ஷல் வி.ஆா். செளத்ரி விமானப் படைத் தளபதி மானவேந்திர சிங் தலைமையில் முப்படை அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு விசாரணையை நிறைவு செய்து அதுதொடா்பான அதிகாரபூா்வ அறிக்கையை தில்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கை புதன்கிழமை சந்தித்து தாக்கல் செய்தது. அப்போது பாதுகாப்புத் துறை செயலா் அஜய் குமாா் மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகள் உடனிருந்தனா்.

விசாரணை அறிக்கையில், ரஷியாவில் தயாரிக்கப்பட்ட எம்ஐ-17வி5 இரட்டை என்ஜின் பொருத்தப்பட்ட அந்த விமான விபத்துக்கு தொழில்நுட்பக் கோளாறோ அல்லது நாசவேலையோ காரணம் அல்ல. மோசமான வானிலைதான் முதன்மை காரணம் என்று கூறப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை மீது விமானப் படை தரப்பிலோ அல்லது ராணுவம் சாா்பிலோ கருத்துகள் எதுவும் வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com