ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கரோனா

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது:

"இன்று மாலை கரோனா பரிசோதனை மேற்கொண்டதில், தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் உள்ளன. மற்ற எந்தப் பிரச்னையும் கிடையாது. என்னுடன் தொடர்பிலிருந்த அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், கரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்."

அசோக் கெலாட்டுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கெலாட் மகன் மற்றும் காங்கிரஸ் தலைவருமான வைபவ் கெலாட்டுக்கு புதன்கிழமை தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. வைபவ் கெலாட் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவராகவும் உள்ளார். அவரும் தனக்கு தொற்று பாதிப்பு இருப்பதை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com