கரோனா தொற்றுப் பரவல்: வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்வோருக்கு புதிய வழிகாட்டி நெறிமுறைகள்

மிகவும் குறைந்த கரோனா பாதிப்பு அல்லது அறிகுறி ஏதும் இல்லாமல் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்வோருக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மிகவும் குறைந்த கரோனா பாதிப்பு அல்லது அறிகுறி ஏதும் இல்லாமல் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்வோருக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
 மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டிருப்பதாவது:
 கரோனா தொற்றால் குறைந்த அளவு பாதிப்பு அல்லது தொற்று அறிகுறி ஏதும் இல்லாமலேயே பாதிப்புக்கு உள்ளானோர் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
 தொற்று உறுதிப்படுத்தப்பட்டு அறிகுறி இல்லாமல் சிலர் இருப்பார்கள். அவர்களுக்கு அறையின் காற்றழுத்தத்தில் சுவாசிப்பதில் பிரச்னை (ஆக்சிஜன் அளவு 93 %க்கு மேல்) இருக்காது. அவர்களே அறிகுறி இல்லாத பாதிப்புக்கு இலக்கானவர்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றனர்.
 நுரையீரலின் மேற்பகுதியில் பாதிப்பு இருப்பதன் அறிகுறி தென்பட்டவர்கள், அதேசமயம், மூச்சுவிடுவதில் சிரமம் இல்லாதவர்கள் (ஆக்சிஜன் அளவு 93 %க்கு மேல்), காய்ச்சல் இல்லாதவர்கள் குறைந்த பாதிப்பு கொண்டவர்களாக வகைப்படுத்தப்படுகின்றனர்.
 இத்தகையவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம். அவர்கள் 7 நாள்களுக்குப் பிறகு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கிக் கொள்ளலாம். (இது முன்னர் 10 நாள்களாக இருந்தது.)
 கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருந்து விலக்குப் பெற்ற நபர்கள் மீண்டும் மறுபரிசோதனை செய்துகொள்ள வேண்டியதில்லை.
 தொற்று அறிகுறி ஏதும் இல்லமல் பாதிப்புக்கு உள்ளானோர் பரிசோதனைகளுக்குச் செல்ல வேண்டியதில்லை. அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ள
 வேண்டும்.
 இவர்களுக்கு மாவட்டம், கோட்ட அளவில் இயங்கும் கரோனா கட்டுப்பாட்டு அறைகள், அவர்களின் தொடர்பு எண்கள் விளம்பரப்படுத்தப்பட வேண்டும்.
 60 வயதுக்கு மேற்பட்டவர்களும், சிறுநீரகம், நுரையீரல், கல்லீரலில் பாதிப்பு, இருதய நோய் உள்ளவர்களும், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, போன்ற பாதிப்பு உள்ளவர்களும், மருத்துவ அதிகாரியின் தகுந்த பரிசீலனைக்குப் பிறகே வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்.
 எச்ஐவி, புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவோர், உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தோர், எதிர்ப்பாற்றல் குறைந்தவர்கள் போன்றோருக்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதியில்லை. மருத்துவ அதிகாரியின் ஆலோசனைக்குப் பிறகே அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com