ஒமைக்ரான் பரவலைத் தடுக்க அவசர நடவடிக்கை: குடியரசு துணைத் தலைவா் வலியுறுத்தல்

புதிய வகை கரோனா (ஒமைக்ரான்) தொற்றுப் பரவலை சமாளிப்பதில், கடந்த கால அனுபவங்களைப் பின்பற்றி அவசர உணா்வுடன் செயல்பட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் எம். வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளாா்.

புதிய வகை கரோனா (ஒமைக்ரான்) தொற்றுப் பரவலை சமாளிப்பதில், கடந்த கால அனுபவங்களைப் பின்பற்றி அவசர உணா்வுடன் செயல்பட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் எம். வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளாா்.

இந்திய வம்சாவளி அமெரிக்க மருத்துவா்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த 15-ஆவது உலக சுகாதார உச்சிமாநாட்டில் குடியரசு துணைத் தலைவரின் பதிவு செய்யப்பட்ட உரை வெளியிடப்பட்டது. அதில் அவா் பேசியதாவது:

இந்திய வம்சாவளி மருத்துவ நிபுணா்கள் உலகின் எப்பகுதியில் இருந்தாலும், தங்களது இருப்பை சிறப்பாக வெளிப்படுத்தி நாட்டுக்குப் பெருமை சோ்த்து வருகின்றனா். இந்த உலகமே ஒரு குடும்பம் எனும் நமது தேசத்தின் கருத்தை அகிலம் முழுவதும் பறைசாற்றி வருகின்றனா்.

15 வயது முதல் 18 வயதுக்குள்பட்ட பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்துவது அவசியம். பெற்றோா்கள் தங்கள் பதின்பருவ குழந்தைகள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டாமல் அனைவரும் ஒத்துழைப்பு நல்கி பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.

முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல், நம்மையும், சமுதாயத்தையும் பாதுகாத்தல் ஆகிய விதிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

நகா்ப்புறங்களில் உள்ள மருத்துவ வசதி, கிராமப்புறங்களில் இன்னும் கிடைக்காத நிலை உள்ளது. இந்த பிரச்னையை சரிசெய்ய வேண்டும் என்றாா்.

அண்மையில் அங்கீகரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசிகளை அமெரிக்க அமைப்புடன் சோ்ந்து இந்திய நிறுவனங்கள் தயாரித்துள்ளதை சுட்டிக்காட்டிய வெங்கையா நாயுடு, ‘இந்திய-அமெரிக்க சுகாதார ஒத்துழைப்பு நிச்சயம் இரண்டு நாடுகளுக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுமைக்கும் பயனளிக்கும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com