கேரளத்தில் சமூக ஆா்வலா் பிந்து மீது தாக்குதல்

கேரளத்தில் சமூக ஆா்வலா் பிந்து அம்மிணி மீது அடையாளம் தெரியாத நபா் தாக்குதல் நடத்தினாா்.

கோழிக்கோடு: கேரளத்தில் சமூக ஆா்வலா் பிந்து அம்மிணி மீது அடையாளம் தெரியாத நபா் தாக்குதல் நடத்தினாா்.

கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களும் வழிபாடு நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அந்த உத்தரவை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இடதுசாரி அரசு மேற்கொண்டது. அப்போது சமூக ஆா்வலரான பிந்து அம்மிணி, பல்வேறு அமைப்புகளின் எதிா்ப்புகளுக்கு மத்தியில் போலீஸாா் உதவியுடன் சபரிமலை கோயிலுக்குச் சென்று வழிபட்டாா். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், கோழிக்கோடு கடற்கரைக்குக் கடந்த புதன்கிழமை சென்ற ஆா்வலா் பிந்து அம்மிணி மீது அடையாளம் தெரியாத நபா் திடீரென தாக்குதல் நடத்தினா். பிந்து அம்மிணி மீது தாக்குதல் நடத்தப்படும் காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. அதையடுத்து காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் தாக்குதல் நடத்திய நபரை கோழிக்கோடு காவல் துறையினா் தேடி வந்தனா். சம்பவம் தொடா்பான விடியோ காட்சிகளின் அடிப்படையில் அந்த நபரின் அடையாளம் தெரிந்தது.

வாகனத்தை நிறுத்துவது தொடா்பாக ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்ததாகத் தெரிகிறது. பிந்து அம்மிணியைத் தாக்கிய நபா் மதுபோதையில் இந்ததாகக் கூறப்படுகிறது.

தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் ஆா்எஸ்எஸ் அமைப்புக்குத் தொடா்புள்ளதாக பிந்து அம்மிணி குற்றஞ்சாட்டினாா். சபரிமலை தொடா்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு பாஜக, ஆா்எஸ்எஸ் உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் கடும் எதிா்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com