ஜம்மு விமான நிலையத்தில் கரோனா சோதனை தீவிரம்

ஜம்மு விமான நிலையத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் மாதிரி சேகரிப்பை தீவிரப்படுத்தியுள்ளது சுகாதாரத்துறை. 
ஜம்மு விமான நிலையத்தில் கரோனா சோதனை தீவிரம்

ஜம்மு விமான நிலையத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் மாதிரி சேகரிப்பை தீவிரப்படுத்தியுள்ளது சுகாதாரத்துறை. 

கரோனா தொற்று அதிகரித்து வரும், நிலையில், நாளுக்குநாள் பாதிப்பும், பலியும் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. இந்நிலையில், ஜம்மு விமான நிலையத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்களின் சோதனை மற்றும் மாதிரி சேகரிப்பை சுகாதாரத்துறை துரிதப்படுத்தியுள்ளது. 

மாதா வைஷ்ணவி தேவி கோவிலுக்கு வரும் பக்தர்களிடம், அதாவது இரண்டு தவணை தடுப்பூசி முழுமையாகப் போடப்படாத வெளிநாட்டுப் பயணிகளிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. 

இதுதொடர்பாக ஜம்முவின் விமான நிலைய இயக்குனர் சஞ்சீவ் குமார் கார்க் கூறுகையில், 

கடந்த 2 ஆண்டுகளாக விமான நிலையத்தில் கரோனா சோதனை தொடர்ந்து நடத்தப்படுகிறது. அதில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் அல்லது ஒரு டோஸ் எடுத்தவர்கள் மற்றும் சர்வதேச பயணிகளிடம் பரிசோதனை தொடர்ந்து மேற்கொள்கிறோம். மேலும் பயணிகளிடம் தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றிதழ் உள்ளதா எனவும் பரிசோதிக்கப்படுகிறது என்றார். 

விமான நிலையத்தின் கரோனா நோடல் அதிகாரி டாக்டர் மோஹித் கபூர் கூறுகையில், 

அரசு வழிகாட்டுதலின்படி நாங்கள் சோதனை நடத்தி வருகிறோம். ஜம்மு விமான நிலையத்தில் தரையிறங்கும் ஒவ்வொரு பயணிகளையும் நாங்கள் பரிசோதனை செய்கிறோம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com