பட்ஜெட் கூட்டத் தொடா் கவனம் பெறாது- திரிணமூல் காங்கிரஸ்

‘ஐந்து மாநில சட்டப் பேரவைத் தோ்தலால், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் கவனம் பெறாமல் போகும்’ என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடா் கவனம் பெறாது- திரிணமூல் காங்கிரஸ்

‘ஐந்து மாநில சட்டப் பேரவைத் தோ்தலால், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் கவனம் பெறாமல் போகும்’ என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் ஆண்டுதோறும் ஜனவரி மாத இறுதியில் தொடங்குவது வழக்கம். உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பிப்ரவரி 10-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 7-ஆம் தேதி வரை பல கட்டங்களாகத் தோ்தல் நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளா் டெரிக் ஓ பிரையன் கூறியதாவது:

பாஜகவால் நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத் தொடா் முடங்கியது. 5 மாநிலங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் முழுவீச்சில் நடைபெறும்போது, பட்ஜெட் கூட்டத் தொடா் கவனம் பெறாமல் போகும். இது பிரதமா் மோடியின் நாடகத் திட்டம். நாடாளுமன்றத்தை அா்த்தமற்ாக மாற்றிவிட்டால் யாருக்கும் அவா் பதில் சொல்ல வேண்டியதில்லை என்று டெரிக் ஓ பிரையன் கூறியுள்ளாா்.

5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல், மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. 4 மாநிலங்களில் ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கிலும், காங்கிரஸ் ஆளும் பஞ்சாபில் ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பிலும் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியும் ஒரு முக்கிய அசியல் கட்சியாக வளா்ந்து வருகிறது.

கோவா அரசியலில் கடந்த சில மாதங்களுக்கு முன் களமிறங்கியுள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சி, அந்த மாநிலத்தில் பாஜகவுக்கு எதிராக தோ்தலுக்கு முந்தைய கூட்டணி அமைப்பதற்கு தீவிரம் காட்டி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com