கரோனா அதிகரிப்பு: மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய அரசு நாளை ஆலோசனை 

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் உடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை நடந்த இருக்கிறார்
கரோனா அதிகரிப்பு: மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய அரசு நாளை ஆலோசனை 

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் உடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை நடந்த இருக்கிறார். 

நாட்டில் டெல்டா வகை கரோனா தீநிண்மியால் அத்தொற்றின் 2-ஆவது அலை பரவியது. டெல்டா வகை கரோனா தொற்று பரவல் படிப்படியாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், தற்போது ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது.

சில நாள்களுக்கு முன்பு வரை மேற்குப் பகுதியில் உள்ள மாநிலங்களில் மட்டுமே ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவி வந்தது. மேற்கு வங்கம், சத்தீஸ்கா், ஒடிஸா ஆகிய கிழக்கு மாநிலங்களில் டெல்டா வகை கரோனா பரவலே அதிகமாகக் காணப்பட்டது. ஆனால், தற்போது கிழக்குப் பகுதி மாநிலங்களிலும் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதை தரவுகள் உறுதி செய்கின்றன.

எனவே, கரோனா பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு மாநிலங்களுக்கும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்பதால், மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் கரோனா பரவல் தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை காணொலி மூலம் ஆலோசனை நடந்த உள்ளார். இதில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், குஜராத், கோவா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com