ஓய்வுபெறும் நீதிபதிக்கு பிரியாவிடை விருந்து: உச்சநீதிமன்றத்தில் 4 நீதிபதிகள், 150 பணியாளா்களுக்கு கரோனா

ஓய்வுபெறும் நீதிபதிக்கான பிரியாவிடை விருந்துக்குப் பிறகு நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்குதொற்று இருப்பது உறுதியானது, 150க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஓய்வுபெறும் நீதிபதிக்கு பிரியாவிடை விருந்து: உச்சநீதிமன்றத்தில் 4 நீதிபதிகள், 150 பணியாளா்களுக்கு கரோனா


புது தில்லி: ஓய்வுபெறும் நீதிபதிக்கான பிரியாவிடை விருந்துக்குப் பிறகு நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்குதொற்று இருப்பது உறுதியானது, 150க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டில் வேகமாக பரவிவரும் கரோனா தொற்றின் மூன்றாவது அலை காரணமாகவும்,  உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, உச்சநீதிமன்றத்தில் நேரடி விசாரணை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஜனவரி 3-ஆம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு காணொலி வழியாக வழக்கு விசாரணைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஓய்வுபெறும் நீதிபதி ஆர் சுபாஷ் ரெட்டிக்கு தலைமை நீதிபதி ஜனவரி 4 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பிரியாவிடை விருந்து அளித்த பிறகு இந்த தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விடுமுறையின் போது வெவ்வேறு இடங்களுக்குச் சென்று வந்த 30க்கும் மேற்பட்ட நீதிபதிகள் ஒன்றுகூடுவதற்கு முதலில் தயக்கம் காட்டிய தலைமை நீதிபதி, ஓய்வுபெறும் நீதிபதிக்கு பிரியாவிடை விருந்து வழங்க ஒப்புக்கொண்டுள்ளார். 

எனினும், பிரியாவிடை விருந்து நிகழ்வின் போது லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நீதிபதி ஒருவர் அனைத்து நீதிபதிகளுடனும் பேசியுள்ளார். அந்த நீதிபதி வியாழக்கிழமை கரோனா பரிசோதனை செய்ததில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பின்னர் மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து ஓய்வுபெறும் நீதிபதிக்கான பிரியாவிடை விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது, 150 ஊழியர்களுக்கும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நான்கு நீதிபதிகளைத் தவிர, பதிவாளர்களாக நியமிக்கப்பட்ட எட்டு உயர்நீதிமன்ற அதிகாரிகளில் ஐந்து பேர் என 150க்கும் மேற்பட்டோர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக கடந்த வியாழக்கிழமை, 2 நீதிபதிகளுக்கு தொற்று பாதிப்பு இருப்பதாக செய்திகள் வெளியானது. 

தற்போதைய நிலவரப்படி, நான்கு நீதிபதிகள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், நீதிபதிகளிடையேயான தொற்று விகிதம் 12.5 சதவிகிதத்தை எட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com