கான்பூரில் புதிய கட்டுப்பாடு: ஜிம்கள், நீச்சல் குளங்கள் மூடல்

உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் அம்மாவட்ட நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 
கான்பூரில் புதிய கட்டுப்பாடு: ஜிம்கள், நீச்சல் குளங்கள் மூடல்

உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் அம்மாவட்ட நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

இதுதொடர்பாக மாவட்ட நீதிமன்ற நீதிபதி விஷாக் ஜி ஐயர் கூறுகையில்,  

கான்பூரில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனாவால் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

தற்போது பாதிப்பு 1000ஐ தாண்டியுள்ளது. எனவே, ஜிம்கள் மற்றும் நீச்சல் குளங்கள் அடுத்த உத்தரவு வரும் வரை மூட உத்தரவிட்டுள்ளது. 

உணவகங்களில் 50 சதவீதம் மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது என்று ஐயர் கூறியுள்ளார். 

உத்தரப் பிரதேசத்தில் செவ்வாயன்று புதிதாக 11,089 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளன.  இது மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையை 44,466 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், 5 இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை 22,937 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com