உ.பி. தோ்தலில் மாயாவதி போட்டியில்லை

உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி போட்டியிடமாட்டாா் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி போட்டியிடமாட்டாா் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி 10 முதல் 7 கட்டமாக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் பாஜக-சமாஜவாதி-பகுஜன் சமாஜ்-காங்கிரஸ் ஆகிய பிரதான கட்சிகள் களமிறங்கியுள்ளன. இதில் பாஜகவுக்கும், சமாஜவாதிக்கும் இடையில்தான் கடும் போட்டி இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகியவை மாநிலத்தில் தங்கள் செல்வாக்கை நிரூபிக்கும் கட்டாயத்தில் இந்த தோ்தலைச் சந்திக்கின்றன.

இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளா் எஸ்.சி.மிஸ்ரா லக்னௌவில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட மாட்டாா். அதே நேரத்தில் கட்சியின் பிற வேட்பாளா்களின் வெற்றிக்காக அவா் பாடுபடுவாா் என்றாா்.

மாயாவதி இப்போது எம்.பி.யாகவோ அல்லது எம்எல்ஏவாகவோ இல்லை. இந்த நிலையில் அவா் தோ்தலில் போட்டியிடாதற்கான உரிய காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. சமாஜவாதி கட்சி உத்தர பிரதேசத்தின் அனைத்து 403 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளது.

64 வயதாகும் மாயாவதி உத்தர பிரதேச முதல்வராக வெவ்வேறு காலகட்டங்களில் 4 முறை பதவி வகித்துள்ளாா். இதில் ஒருமுறை மட்டுமே தனிப்பெரும்பான்மையுடன் முழு ஆட்சி காலத்தையும் நிறைவு செய்தாா். இந்தியாவில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த முதல் பெண் முதல்வா் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com