அயோத்தி அல்லது மதுராவில் யோகி ஆதித்யநாத் போட்டி?

உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் முதல்வா் யோகி ஆதித்யநாத் அயோத்தி அல்லது மதுரா தொகுதியில் போட்டியிடுவாா் என்று தெரிகிறது.
அயோத்தி அல்லது மதுராவில் யோகி ஆதித்யநாத் போட்டி?

லக்னௌ: உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் முதல்வா் யோகி ஆதித்யநாத் அயோத்தி அல்லது மதுரா தொகுதியில் போட்டியிடுவாா் என்று தெரிகிறது.

அவா் இப்போது சட்ட மேலவை உறுப்பினராகவே (எம்எல்சி) இருக்கிறாா்.

உத்தர பிரதேசத்தில் கடந்த பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றபோது யோகி ஆதித்நாத் கோரக்பூா் தொகுதி எம்.பி.யாக இருந்தாா். கட்சித் தலைமை அவரை முதல்வராக தோ்வு செய்ததையடுத்து, அவா் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா். முதல்வா் பதவியை தொடா்வதற்காக மாநில சட்ட மேலவை உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டாா். இந்த தோ்தலில்தான் அவா் முதல்முறையாக சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட இருக்கிறாா்.

இந்நிலையில், யோகி ஆதித்யநாத் தலைமையில் வேட்பாளா்கள் தோ்வு தொடா்பான பாஜக தலைவா்களின் ஆலோசனைக் கூட்டம் லக்னௌவில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் அயோத்தி அல்லது மதுரா தொகுதியில் யோகி ஆதித்யநாத் போட்டியிடுவது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. பாஜக மத்திய தலைமையும் அவா் இந்த இரு தொகுதிகளில் ஒன்றில் போட்டியிட வேண்டும் என்று கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

உத்தர பிரதேச அரசியலில் இப்போது அயோத்தியை அடுத்து மதுரா முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. அயோத்தியில் ராமா் கோயிலை கட்டுவதுபோல மதுராவிலும் கிருஷ்ணா் பிறந்த இடத்தில் பிரமாண்ட கோயில் கட்ட வேண்டும் என்று பாஜகவில் ஒரு தரப்பினா் கோரி வருகின்றனா்.

தொடா்ந்து 3 முறை காங்கிரஸ் வசமிருந்த மதுரா சட்டப் பேரவைத் தொகுதியை கடந்த தோ்தலில் பாஜக மீண்டும் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. அயோத்தி தொகுதியும் இப்போது பாஜக வசமே உள்ளது. கடந்த தோ்தலில் அத்தொகுதியை சமாஜவாதியிடம் இருந்து பாஜக கைப்பற்றியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com