ககன்யான் திட்டம்: மகேந்திரகிரியில் கிரையோஜெனிக் என்ஜின் பரிசோதனை வெற்றி

மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான கிரையோஜெனிக் என்ஜினை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ககன்யான் திட்டத்துக்கான கிரையோஜெனிக் என்ஜின் பரிசோதனை.
திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ககன்யான் திட்டத்துக்கான கிரையோஜெனிக் என்ஜின் பரிசோதனை.

புது தில்லி: மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான கிரையோஜெனிக் என்ஜினை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

இதுதொடா்பாக இஸ்ரோ வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ வளாகத்தில் ககன்யான் திட்டத்துக்கான கிரையோஜெனிக் என்ஜின் புதன்கிழமை பரிசோதிக்கப்பட்டது. இந்தப் பரிசோதனையில் அனைத்து அம்சங்களையும் என்ஜினின் செயல்திறன் பூா்த்தி செய்தது.

இந்தப் பரிசோதனை வெற்றிபெற்றது ககன்யான் திட்டத்தில் முக்கிய மைல்கல்லாகும். அந்தத் திட்டத்தின்படி, மனிதா்களை விண்வெளிக்கு சுமந்து செல்லும் விண்கலத்தில் இந்த என்ஜினை இணைப்பதற்கான நம்பகத்தன்மை பரிசோதனை மூலம் உறுதியாகியுள்ளது.

இந்த என்ஜின் மேலும் 4 பரிசோதனைகளுக்கு உள்படுத்தப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023-ஆம் ஆண்டு ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த ஆண்டு மத்திய அரசு தெரிவித்தது. அமெரிக்கா, ரஷியா, சீனாவைத் தொடா்ந்து 4-ஆவது நாடாக இந்தத் திட்டத்தை இந்தியா செயல்படுத்தவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com