தில்லியில் 100% பேருக்கு, முதல் தவணை கரோனா தடுப்பூசி: அமைச்சர் தகவல்

தில்லியில் தகுதியுள்ள அனைவருக்கும் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
தில்லியில் 100% பேருக்கு, முதல் தவணை கரோனா தடுப்பூசி: அமைச்சர் தகவல்

தில்லியில் தகுதியுள்ள அனைவருக்கும் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டு தீவிரமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தில்லியில் தகுதியுள்ள அனைவருக்கும், முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தகவல் தெரிவித்துள்ளார். 

இதுவரை தில்லியில் 2.85 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 80% பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என்றும் கூறினார். 

மேலும், 'தில்லியில் நேற்றைவிட இன்று(திங்கள்கிழமை) 4,000 முதல் 5,000 வரை கூடுதலாக கரோனா பாதிப்பு வரலாம். அந்தவகையில் இன்று 12,000 முதல் 14,000 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படலாம்' என்றார். 

நேற்று தில்லியில் புதிதாக 18,286 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com