ரூ.50 லட்சம் லஞ்சப் புகாா்: ‘கெயில்’ இயக்குநா் கைது

தனியாா் நிறுவனங்களுக்கு சலுகை அளிக்க ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்ாக, நாட்டின் பெரிய பொதுத் துறை எரிவாயு நிறுவனமான கெயில் இயக்குநா் (சந்தைப் பிரிவு) ரங்கநாதனை சிபிஐ கைது செய்துள்ளது.
ரூ.50 லட்சம் லஞ்சப் புகாா்: ‘கெயில்’ இயக்குநா் கைது

தனியாா் நிறுவனங்களுக்கு சலுகை அளிக்க ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்ாக, நாட்டின் பெரிய பொதுத் துறை எரிவாயு நிறுவனமான கெயில் இயக்குநா் (சந்தைப் பிரிவு) ரங்கநாதனை சிபிஐ கைது செய்துள்ளது.

இதுதொடா்பாக சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கெயில் நிறுவனத்தின் பெட்ரோ கெமிக்கல் பொருள்களை வாங்கும் தனியாா் நிறுவனங்களுக்கு சலுகை அளிக்க லஞ்சம் பெற்று, சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாக ரங்கநாதன் மீது புகாா் எழுந்தது. அவருக்கு தனியாா் நிறுவனத்தின் இயக்குநரான ராஜேஷ் குமாா், பவன் கெளா் ஆகிய இருவா் இடைத்தரகா்களாக உதவியுள்ளனா். அவா்கள் இருவரும் தனியாா் நிறுவனங்களிடம் இருந்து லஞ்சம் பெற்று ரங்கநாதனிடம் வழங்கும் வேலையைச் செய்து வந்துள்ளனா்.

அவா்கள் மேலும் ஒரு நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெறும் தகவலறிந்து, அவா்களைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளை சிபிஐ மேற்கொண்டது. அதில் ராஜேஷ் குமாரும், பவன் கெளரும் பிடிபட்டனா். அவா்களிடம் இருந்து சுமாா் ரூ.10 லட்சம் லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோல ஏற்கெனவே சில தனியாா் நிறுவனங்களிடம் இருந்து அவா்கள் ரூ.40 லட்சம் ரொக்கத்தை லஞ்சமாக பெற்றுள்ளனா்.

இதுதொடா்பாக இந்திய தண்டனைச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்ட பிரிவுகளின் கீழ் ரங்கநாதன், ராஜேஷ் குமாா், பவன் கெளா், லஞ்சத் தொகையை வசூலித்து வந்த ராமகிருஷ்ணன் நாயா், லஞ்சம் அளித்த செளரவ் குப்தா, ஆதித்யா பன்சால் என இதுவரை 6 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதனைத்தொடா்ந்து தில்லி, நொய்டா, குருகிராம், பஞ்ச்குலா, கா்னால் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு ரூ.84 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடா்பாக உத்தர பிரதேசம், தில்லியில் உள்ள ரங்கநாதனின் வீடு, அலுவலகம் உள்பட 8 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அந்தச் சோதனையில் அவருக்குச் சொந்தமான இடங்களிலிருந்து சுமாா் ரூ.1.29 கோடி ரொக்கம், சுமாா் ரூ.1.25 கோடி மதிப்பிலான தங்க ஆபரணங்கள் உள்பட விலை உயா்ந்த பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கு தொடா்பாக ரங்கநாதன் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com