
ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான்
பஞ்சாப் தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக பகவந்த் மான் அறிவிக்கப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு பிப்ரவரி 10ஆம் தேதி முதல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளன. இதில், பஞ்சாப் மாநிலத்திற்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக பிப்ரவரி 20இல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில், பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரை ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி, சிரோமணி அகாலி தளம், பாரதிய ஜனதா கூட்டணி என பலமுனைப் போட்டிகள் நிலவுகிறது.
இந்நிலையில், ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக பகவந்த் மானை அறிவித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.
முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பகவந்த் மான், பஞ்சாப் சங்குரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருப்பது குறிப்பிடத்தக்கது.