
75 ஆண்டுகளில் முதல் முறையாக, குடியரசு நாள் அணிவகுப்பில் ஒரு மாற்றம் (கோப்பிலிருந்து)
புது தில்லி: நாட்டின் 75வது குடியரசு நாள் விழா ஜனவரி 26ஆம் தேதி வெகு சிறப்பாகக் கொண்டாடப்படஉள்ளது. இந்நிலையில், புது தில்லியில் நடைபெறும் குடியரசு நாள் அணிவகுப்பு விழா முதல் முறையாக 30 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கவிருக்கிறது.
இதையும் படிக்க.. கரோனா பேரிடரால் பல சாதனைகளை முறியடித்த டோலோ-650 விற்பனை
வழக்கமாக, புது தில்லியில் நடைபெறும் குடியரசு நாள் விழா அணிவகுப்பு சரியாக காலை 10 மணிக்குத் தொடங்குவது வழக்கும். ஆனால், இம்முறை, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றும் பாதுகாப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி காரணமாக, அணிவகுப்பு 30 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து மூத்த காவல்துறை அதிகாரி கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் குடியரசு நாள் அணிவகுப்பு சரியாக காலை 10 மணிக்குத் தொடங்கிவிடும். ஆனால் இந்த ஆண்டு அது 10.30 மணிக்குத் தொடங்கவிருக்கிறது என்றார்.
இதற்குக் காரணம், கரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதும், ஜம்மு-காஷ்மீர் மாநில பாதுகாப்புக்காக தங்கள் இன்னுயிரை நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் நடைபெறும் என்று கூறினார்.