
ஒமைக்ரான் பரவல் காரணமாக, ரஷியாவில் கடந்த ஒரே வாரத்தில் மட்டும் புதிதாக கரோனா கண்டறியப்படுவோரின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 30,726 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, ஒரு வாரத்துக்கு முன்னா் பதிவான தினசரி எணிக்கையைப் போல் இரு மடங்காகும். அப்போது அந்த எண்ணிக்கை 15,830-ஆக பதிவு செய்யப்பட்டது. இதுதவிர, புதிதாக 670 போ் கரோனா பாதிப்பால் பலியாகினா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
ரஷியாவில் இதுவரை 1,08,34,260 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது; அவா்களில் 98,78,371 போ் அந்த நோய்க்கு பலியாகியுளளனா்.