
பஞ்சாப் முதல்வா் சரண்ஜீத்சிங் சன்னி
தேர்தலையொட்டி அமலாக்கத்துறை சோதனை மூலம் அழுத்தம் தர முயற்சி செய்வதாக பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டவிரோதமாக மண் குவாரிகள் தொடர்பான புகார் எழுந்ததையடுத்து சன்னியின் நெருங்கிய உறவினரான பூபிந்தர் சிங் ஹனி உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்கள் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க | நெருங்கும் தேர்தல்: பஞ்சாப் முதல்வரின் உறவினர்கள் வீடுகளில் சோதனை
இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் கூறியதாவது:
“சோதனை நடைபெற்று வருகின்றது. அவர்கள் என்னை குறிவைத்து, வரும் தேர்தலில் அழுத்தம் தருவதற்காக சோதனை நடத்துகிறார்கள். இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. நாங்கள் சண்டையிட தயாராக உள்ளோம். இதேபோன்ற சம்பவம் தான் மேற்குவங்க தேர்தலின்போதும் நடந்தது.”
பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் பிப்ரவரி 20ஆம் தேதி நடைபெறவுள்ளன. இதற்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.