
கோப்புப்படம்
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விஜய் ஆசாரி (30). இவர் செவ்வாய்க்கிழமை இரவு குடும்பப் பிரச்னை காரணமாகப் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். குடும்ப உறுப்பினர்கள் அவரை ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் கரோனா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபர் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துவிட்டு கட்டடத்தின் 4-வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தனக்கு கரோனா தொற்று இருப்பதால் அவர் மனவேதனை அடைந்ததாக ஆசாரியின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கடந்த 2 ஆண்டுகளில் கரோனா அச்சத்தால் பல தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.