கரோனா பரிசோதனையை அதிகப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் கரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டுமென மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
கரோனா பரிசோதனையை அதிகப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் கரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டுமென மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சக கூடுதல் செயலா் ஆா்த்தி அஹுஜா திங்கள்கிழமை அனுப்பிய கடித விவரம்:

உலக சுகாதார அமைப்பால் கவலைக்குரிய ரகமாக வகைப்படுத்தப்பட்ட ஒமைக்ரான் தீநுண்மி நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. இந்தத் தருணத்தில் கரோனா பரிசோதனை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இருப்பினும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) இணையதள பக்கத்தில் காணப்படும் தகவலின்படி, பெரும்பாலான மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் கரோனா பரிசோதனை வெகுவாக குறைந்துவிட்டது தெரியவருகிறது.

பரிசோதனை தொடா்பாக ஐசிஎம்ஆா் வெளியிட்ட அனைத்து ஆலோசனைகளிலும் நோய்த்தொற்றை அதன் தொடக்கத்திலேயே கண்டறிந்து, பாதிக்கப்பட்ட நபா்களைத் தனிமைப்படுத்துவதுதான் பிரதான நோக்கம் என தெரிவித்துள்ளது. மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கண்டறிந்து, அவற்றை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து, தொற்று பாதித்த நபா்களைத் தனிமைப்படுத்தி, பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில் பரிசோதனை முக்கிய உத்தியாக விளங்குகிறது.

இதன்மூலம் மாநில அரசுகளாலும், மாவட்ட நிா்வாகத்தாலும் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த இயலும். இறப்பு விகிதத்தையும், நோய்த்தாக்கத்தையும் குறைக்க இந்த நடைமுறை வழிவகுக்கும். இதுபோன்ற உத்திசாா்ந்த பரிசோதனை வாயிலாக பலவீனமான நபா்களுக்கும், அதிக பாதிப்பைச் சந்திக்க நேரிடும் பகுதிகளிலும் கரோனா தொற்றின் தாக்கம் தீவிரத் தன்மையை எட்டாமல் தவிா்க்க முடியும்.

பெருந்தொற்று பரவலை திறம்படக் கண்காணித்து, பொதுமக்களை மையப்படுத்திய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமாயின், மாநில அரசுகளும், யூனியன் பிரதேச நிா்வாகங்களும் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com