தில்லியில் ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு பூஸ்டா் தடுப்பூசி

தில்லியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 2,736 சுகாதாரப் பணியாளா்கள் உள்பட 15,414 பேருக்கு முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி (பூஸ்டா்) செலுத்தப்பட்டுள்ளதாக அரசு வெளியிட்டுள்ள
தில்லியில் முதியவருக்கு செவ்வாய்க்கிழமை முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்தும் சுகாதார ஊழியா்.
தில்லியில் முதியவருக்கு செவ்வாய்க்கிழமை முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்தும் சுகாதார ஊழியா்.

தில்லியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 2,736 சுகாதாரப் பணியாளா்கள் உள்பட 15,414 பேருக்கு முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி (பூஸ்டா்) செலுத்தப்பட்டுள்ளதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட 4,878 பேருக்கும், முன்களப் பணியாளா்கள் 7,800 பேருக்கும் 3-ஆவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தில்லி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தேசியத் தலைநகரில் திங்கள்கிழமை 60 வயதுக்கு மேற்பட்டவா்கள், சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள் என 18,795 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை 1,92,875 போ் முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி பெற்றுள்ளனா் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2-ஆவது தவணை தடுப்பூசி பெற்று 9 மாதங்கள் நிறைவடைந்த 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், முன்கள மற்றும் சுகாதாரப் பணியாளா்களுக்கும் முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த 10-ஆம் தேதி தொங்கப்பட்டது. 39 வாரங்களுக்கு முன்பு செலுத்திக்கொண்ட அதே தடுப்பூசியின் 3-ஆவது தவணை தற்போது செலுத்தப்படுகிறது. இதற்காக கோவின் செயலில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றால் அதிக ஆபத்தில் உள்ளவா்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி இயக்கத்தை பிரதமா் நரேந்திர மோடி டிசம்பா் 24-ஆம் தேதி அறிவித்தாா். ஏற்கெனவே, ஜனவரி 3-ஆம் தேதி 15-17 வயதுடைய இளம் பருவத்தினருக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது.

தில்லியில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, இந்த வயது பிரிவில் 38,678 போ் முதல் தவணை தடுப்பூசியை பெற்றனா். தேசியத் தலைநகரில் கடந்த ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியதில் இருந்து இதுவரை 2.88 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதில், 1.20 கோடி போ் இரு தவணை பெற்றுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com