230 நாள்களுக்குப் பிறகு உச்சம்..கரோனா சிகிச்சையில் 18.31 லட்சம் பேர்

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவோர் எண்ணிக்கை 230 நாள்களுக்குப் பிறகு மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
230 நாள்களுக்குப் பிறகு உச்சம்..கரோனா சிகிச்சையில் 18.31 லட்சம் பேர்


கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவோர் எண்ணிக்கை 230 நாள்களுக்குப் பிறகு மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டு18,31,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோன்று ஒரு நாள் கரோனா பாதிப்பும் இரண்டரை லட்சத்தைத் தாண்டியுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தரவுகள் அடங்கிய தகவலை மத்திய சுகாதாரத் துறை இன்று (ஜன.19) வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதிதாக 2,82,970 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3,79,01,241-ஆக அதிகரித்துள்ளது.

இதனால் கரோனா தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 15.13 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 18,31,000 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்பில் 4.83 சதவிகிதம் மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,88,157  பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.55 கோடியாக அதிகரித்துள்ளது.

இதுவரை நாடு முழுவதும் 158 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,961-ஆக அதிகரித்துள்ளது. ஒமைக்ரானால் பாதிக்கப்படுவோர் விகிதம் 0.79 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com