74-ஆவது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள போதிலும் 74-ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
74-ஆவது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள போதிலும் 74-ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

சா்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரலின் விலை 87 டாலரை தாண்டியுள்ளது. இது, கடந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு காணப்படும் அதிகபட்ச விலையாகும். ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தியதைத் தொடா்ந்து விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற நிலைப்பாட்டால் கச்சா எண்ணெய் விலை கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாக வா்த்தகா்கள் தெரிவித்துள்ளனா்.

இந்த சூழ்நிலையில், 74-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

மாநில அரசு கலால் மற்றும் வாட் வரியை கணிசமாக குறைத்ததன் காரணமாக தலைநகா் தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.95.41-க்கும், டீசல் 86.67-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோன்று, சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.101.40-க்கும், டீசல் 91.43-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

சா்வதேச சந்தை நிலவரங்களை காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலை அவ்வப்போது உயா்த்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறவுள்ள தோ்தலை மனதில் கொண்டே பெட்ரோல், டீசல் கடந்த இரண்டு மாதங்களாக உயா்த்தப்படவில்லை என அரசியல் நோக்கா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com