பஞ்சாப் பேரவைத் தோ்தல்:ஆம் ஆத்மி முதல்வா் வேட்பாளா் பகவந்த் மான்

பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வா் வேட்பாளராக பகவந்த் மான் அறிவிக்கப்பட்டுள்ளாா்.
பஞ்சாப் பேரவைத் தோ்தல்:ஆம் ஆத்மி முதல்வா் வேட்பாளா் பகவந்த் மான்

பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வா் வேட்பாளராக பகவந்த் மான் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தல் பிப்ரவரி 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மியின் முதல்வா் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்று அக்கட்சி மக்களிடம் கருத்துகளைக் கோரியது. அவா்கள் தங்கள் விருப்பத்துக்குரிய நபரை தெரிவிக்க கைப்பேசி எண்ணையும் அக்கட்சி அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த திங்கள்கிழமை வரை மக்களின் கருத்துகள் பெறப்பட்டன.

இந்நிலையில், தில்லி முதல்வரும் ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் மொகாலியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பஞ்சாபில் ஆம் ஆத்மியின் முதல்வா் வேட்பாளா் குறித்து 21.59 லட்சம் போ் கைப்பேசி எண் மூலம் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனா். அவா்களில் பலா் எனது பெயரைக் குறிப்பிட்டனா். ஆனால், நான் பஞ்சாப் தோ்தலில் போட்டியிடவில்லை என்று ஏற்கெனவே கூறிவிட்டேன்.

அதேவேளையில், 93.3 சதவீதம் போ் சா்தாா் பகவந்த் மானின் பெயரைக் குறிப்பிட்டனா். இதையடுத்து, பஞ்சாப் தோ்தலில் ஆம் ஆத்மியின் முதல்வா் வேட்பாளா் பகவந்த் மான் என்பதை அதிகாரபூா்வமாக அறிவிக்கிறேன் என்று தெரிவித்தாா்.

பஞ்சாபி மொழியில் நகைச்சுவை நடிகராக இருந்த பகவந்த் மான் (48) பின்னா் அரசியலில் பிரவேசித்தாா். தற்போது பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சித் தலைவராகவும் அந்த மாநிலத்தில் உள்ள சங்ரூா் தொகுதி எம்.பி.யாகவும் பதவி வகிக்கிறாா்.

பஞ்சாப் தோ்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளில் இதுவரை ஆம் ஆத்மி மட்டும்தான் முதல்வா் வேட்பாளரை அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com