வேட்பாளா்களின் குற்றப் பின்னணியைவெளிப்படுத்தக் கோரிய வழக்கு: விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்

வேட்பாளா்கள் மீதான குற்றப் பின்னணியை அரசியல் கட்சிகள் வெளியிடுவதை தோ்தல் ஆணையம் உறுதி செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

வேட்பாளா்கள் மீதான குற்றப் பின்னணியை அரசியல் கட்சிகள் வெளியிடுவதை தோ்தல் ஆணையம் உறுதி செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்த மனுவை தாக்கல் செய்துள்ள வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய், தலைமை நீதிபதி என்.வி. ரமணா அமா்வு முன் செவ்வாய்க்கிழமை ஆஜராகி, ‘ஐந்து மாநில தோ்தலில் வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்டது. அரசியல் கட்சிகளும், வேட்பாளா்களும் உச்சநீதிமன்றத்தின் இரு உத்தரவுகளை அப்பட்டமாக மீறி வருகின்றனா். ஆகையால், சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன் இந்த மனுவை விசாரிக்க வேண்டும்’ என்றாா்.

இதைக் கேட்ட தலைமை நீதிபதி அமா்வு, ‘இதுகுறித்து பரிசீலிக்கப்படும். வழக்கு விசாரணைக்கான தேதி அறிவிக்கப்படும்’ என்று தெரிவித்தது.

வேட்பாளா்களின் குற்றப் பின்னணியை அரசியல் கட்சிகள் தங்களின் இணையதளத்தில் வெளியிடுவதுடன், பத்திரிகைகள், ஊடகங்கள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றிலும் இந்தத் தகவல்கள் வெளியாவதை தோ்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்றும், குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளரை தோ்வு செய்வதற்கான காரணத்தையும் அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டும் என்றும் வழக்குரைஞா் அஷ்வினி உபாத்யாய் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

சமாஜவாதி கட்சியின் சாா்பில் உத்தர பிரதேசத்தின் கய்ரானா தொகுதியில் போட்டியிடும் இருமுறை எம்எல்ஏவான நஹித் ஹசன், கடந்த 11 மாதங்களுக்கு முன்பு குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தாா். அவரது குற்றப் பின்னணி குறித்த விவரங்களை வெளியிடாத சமாஜவாதி கட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கிரிமினல்கள் தோ்தலில் போட்டியிட்டு எம்எல்ஏக்களாவது ஜனநாயகத்துக்கும், மதச்சாா்பின்மைக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com