மாநில அரசுகளுக்கு வரிப்பகிர்வின் முன் தவணையாக ரூ.47,541 கோடி விடுவிப்பு

வரிப்பகிர்வின் முன் தவணையாக ரூ.47,541 கோடியை மாநில அரசுகளுக்கு வழங்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்


புதுதில்லி: வரிப்பகிர்வின் முன் தவணையாக ரூ.47,541 கோடியை மாநில அரசுகளுக்கு வழங்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

ஜனவரி 2022-இல் மாநில அரசுகள் மொத்தம் ரூ.95,082 கோடி பெற்றுள்ளன. வரிப்பகிர்வின் முன் தவணையாக மாநில அரசுகளுக்கு ரூ.47,541 கோடியை விடுவிக்க மத்திய நிதி மற்றும் பெரு நிறுவனங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார். இது, ஜனவரி 2022 மாதத்திற்கு இன்று விடுவிக்கப்படும் வழக்கமான பகிர்வுக்கு கூடுதலாக வழங்கப்படுகிறது என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் மாநில அரசுகள் இதுவரை மொத்தம் ரூ.95,082 கோடியை பெற்றுள்ளன, அல்லது 2022 ஜனவரி மாதத்திற்குரிய வரவுகளை விட இருமடங்கு அதிகமாகும். 

மாநில வாரியான நிதி பகிர்வு பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழ்நாட்டிற்கு ஜனவரி மாத தவணையாக ரூ.1939 கோடியே 19 லட்சம் முன் தவணையாகவும், ரூ.1939 கோடியே 19 லட்சம் என மொத்தம் ரூ.3,878 கோடியே 38 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் தேதி மத்திய அரசு மாநிலங்களுக்கு ரூ.47,541 கோடி வரி பகிர்வின் முதல் முன் தவணையை வெளியிட்டது.

2021-22 நிதியாண்டில் ஜிஎஸ்டி இழப்பீடு பற்றாக்குறைக்கு பதிலாக மாநில அரசுகளுக்கு ரூ.1.59 லட்சம் கோடியை மத்திய அரசிடம் இருந்து விடுவிப்பது அக்டோபர் 2021 இறுதிக்குள் முடிக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com