உ.பி. எம்எல்ஏ அதிதி சிங் காங்கிரஸில் இருந்து விலகல்!

உத்தரப்பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏ அதிதி சிங், கட்சியில் இருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். 
கடந்த நவம்பர் மாதம் பாஜகவில் இணைந்த அதிதி சிங்
கடந்த நவம்பர் மாதம் பாஜகவில் இணைந்த அதிதி சிங்

உத்தரப்பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏ அதிதி சிங், கட்சியில் இருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். 

உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதி  காங்கிரஸ் எம்எல்ஏ அதிதி சிங், சில நடவடிக்கைகளுக்காக கடந்த ஆண்டு மே மாதம் காங்கிரஸ் மகளிர் அணி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். 

அதைதொடர்ந்து காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மீது விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாக, வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு பிரியங்கா விமர்சனம் செய்ததற்கு எதிர்ப்புகளை பதிவு செய்திருந்தார். இதனால் கட்சியில் இருந்து இடைநீக்கம்ஸ் செய்யப்பட்டார். 

பின்னர் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே அவர் பாஜகவில் இணைந்தார். இதையடுத்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து முழுமையாக விலகுவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். இதன்மூலமாக அதிகாரப்பூர்வமாக அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார். 

நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிதி சிங், அதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com