குடும்ப வன்முறை: மருமகளுக்கு ரூ.1 கோடி இழப்பீடு தர பாஜக தலைவருக்கு உத்தரவு
குடும்ப வன்முறை: மருமகளுக்கு ரூ.1 கோடி இழப்பீடு தர பாஜக தலைவருக்கு உத்தரவு

குடும்ப வன்முறை: மருமகளுக்கு ரூ.1 கோடி இழப்பீடு தர பாஜக தலைவருக்கு உத்தரவு

ஆந்திர மாநில முன்னாள் பாஜக தலைவர் கன்னா லஷ்மிநாராயணா, அவரது மனைவி மற்றும் மகனுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


விஜயவாடா: குடும்ப வன்முறையின் கீழ் வழக்குப் பதிவு செய்த பெண்ணுக்கு ரூ.1 கோடி இழப்பீடு தருமாறு ஆந்திர மாநில முன்னாள் பாஜக தலைவர் கன்னா லஷ்மிநாராயணா, அவரது மனைவி மற்றும் மகனுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

விஜயவாடா முதன்மை கூடுதல் தலைமை நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மருமுகள் ஸ்ரீலஷ்மி கீர்த்திக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், கீர்த்தி மற்றும் அவரது மகள் தங்குவதற்கு தங்கும் வசதி செய்து கொடுக்குமாறும் தவறும்பட்சத்தில் அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.50,000 வழங்குமாறும் முன்னாள் அமைச்சர், அவரது மனைவி கன்னா விஜயலஷ்மி, மகன் கன்னா நாகராஜூவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், குடும்ப வன்முறையால் காயமடைந்த கீர்த்தி மற்றும் அவரது மகளின் மருத்துவ சிகிச்சைக்காகவும் ரூ.50,000 வழங்குமாறும் உத்தரவில் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது.

கன்னா நாகராஜூவுக்கும் கீர்த்திக்கும் கடந்த 2006ஆம் ஆண்டு மே மாதம் காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2013ஆம் ஆண்டு மகள் பிறந்த நிலையில், தற்போது, தனது கணவர் மற்றும் கணவர் வீட்டார் மீது கீர்த்தி குடும்ப வன்முறை வழக்குத் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com