பாஜகவின் ஆட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள்: சீதாராம் யெச்சூரி நம்பிக்கை

அவசர நிலை தோற்கடிக்கப்பட்டது போல் பாஜகவின் ஆட்சியையும் மக்கள் தூக்கி எறிவார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
சீதாராம் யெச்சூரி
சீதாராம் யெச்சூரி

காஷ்மீா் பத்திரிகையாளா் மன்றத்துக்கு இரு தரப்பினா் உரிமை கொண்டாடியதால், மன்றத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை ரத்து செய்து அந்த யூனியன் பிரதேசத்தின் நிர்வாகம் திரும்பப் பெற்றது.

‘ஜனநாயகத்தின் குரலாக செயல்பட்டு வந்த பத்திரிகையாளா் மன்றத்தை மூட வேண்டும் என்ற நோக்கத்திலேயே அரசு நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது’ என்று பத்திரிகையாளா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

2019, ஜூலை மாதத்துக்கு பிறகு காஷ்மீா் பத்திரிகையாளா் மன்றத்துக்கு தோ்தல் நடத்தி நிர்வாகிகள் தோ்வு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில பத்திரிகையாளா் குழுவினா் சனிக்கிழமை போலீஸாருடன் பத்திரிகையாளா் மன்றத்துக்குள் நுழைந்து தாங்கள்தான் புதிய நிர்வாகத்தின் பிரதிநிதிகள் என்று கூறியதால் சா்ச்சை எழுந்தது.

இதையடுத்து, ‘‘போலோ வீவ்’ என்ற இடத்தில் பத்திரிகையாளா் மன்றத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்துக்கான உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. ஆகையால், இந்த மன்றத்தின் பெயரை வைத்து அறிக்கைகள் வெளியிட்டால் அது சட்ட விரோதமாகும்’ என்று யூனியன் பிரதேச அரசு அறிவித்தது.

காஷ்மீா் பத்திரிகையாளா் மன்றம் சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, "காஷ்மீர் பிரஸ் கிளப் எனப்படும் ஊடக அமைப்பு இராணுவ உதவி மூலம் காஷ்மீர் நிர்வாகம் மூடியுள்ளது.“கருத்து சுதந்தரம்” மீது வரலாறு காணாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மாற்றுக் கருத்துகள் முடக்கப்பட்டுள்ளது. 1975 அவசரகாலத்தை எதிர்த்தோம். மோடி, பாஜகவின் கூற்றுகள் வெத்துவேட்டுதான். அவசர நிலை காலம் தோற்கடிக்கப்பட்டது போல மக்கள் இந்த ஆட்சியையும் தூக்கி எறிவார்கள். அதில் சந்தேகம் வேண்டாம்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com