ஜார்க்கண்டில் ஆர்டிபிசிஆர், ஆர்ஏடி பரிசோதனை கட்டணங்கள் குறைப்பு

கரோனா பரிசோதனைகளான ஆர்டிபிசிஆர் மற்றும் விரைவு பரிசோதனை (ஆர்ஏடி) ஆகியவற்றுக்கான கட்டணங்களை ஜார்க்கண்ட் அரசு குறைத்துள்ளது.
ஜார்க்கண்டில் ஆர்டிபிசிஆர், ஆர்ஏடி பரிசோதனை கட்டணங்கள் குறைப்பு

கரோனா பரிசோதனைகளான ஆர்டிபிசிஆர் மற்றும் விரைவு பரிசோதனை (ஆர்ஏடி) ஆகியவற்றுக்கான கட்டணங்களை ஜார்க்கண்ட் அரசு குறைத்துள்ளது. இது உடனடியாக அமல்படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. 

ஆர்டி-பிசிஆர் சோதனை கட்டணம் ரூ.400-இல் இருந்து ரூ.300 ஆகவும், ரேபிட் ஆன்டிஜென் (ஆர்ஏடி) சோதனைக் கட்டணம் ரூ.150ல் இருந்து, ரூ.100 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. கரோனா மாதிரிகள் வீட்டிற்கு வந்த சேகரிக்க ரூ.100 செலுத்த வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பன்னா குப்தா தனது சுட்டுரை பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அருண்குமார் சிங் கூறுகையில்,

பரிசோதனை செய்யப்படும் பொருட்களின் விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com